இளம்பெண்ணின் சிகிச்சை செலவை அரசு ஏற்கும்; மந்திரி சுதாகர் அறிவிப்பு


இளம்பெண்ணின் சிகிச்சை செலவை அரசு ஏற்கும்; மந்திரி சுதாகர் அறிவிப்பு
x
தினத்தந்தி 30 April 2022 9:08 PM IST (Updated: 30 April 2022 9:08 PM IST)
t-max-icont-min-icon

திராவகம் வீச்சால் பாதிக்கப்பட்டுள்ள இளம்பெண்ணுக்கு ஆகும் சிகிச்சை செலவை அரசே ஏற்கும் என்று மந்திரி சுதாகர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

இளம்பெண்ணுக்கு சுதாகா் ஆறுதல்

  பெங்களூரு காமாட்சிபாளையா அருகே சுங்கதகட்டேயில் தனியார் நிதி நிறுவன பெண் ஊழியர் மீது நாகேஷ் என்பவர் காதலிக்க மறுத்ததால் திராவகம் வீசி இருந்தார். படுகாயம் அடைந்த அந்த இளம்பெண் தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இன்று காலையில் ஆஸ்பத்திரிக்கு சென்ற சுகாதாரத்துறை மந்திரி சுதாகா், இளம்பெண்ணின் உடல் நலம் குறித்து விசாரித்ததுடன், அவருக்கு ஆறுதலும் கூறினார்.

  மேலும் இளம்பெண் வேகமாக குணமடைய உரிய சிகிச்சை அளிக்கும்படி டாக்டரிடம் அவர் வலியுறுத்தினார். பின்னர் மந்திரி சுதாகர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

அரசு வேலை வழங்குவது...

  திராவகம் வீச்சால் பாதிக்கப்பட்ட இளம்பெண்ணும், அவரது குடும்பத்தினரும் மன தைரியத்துடன் இருக்க வேண்டும். இளம்பெண்ணு்க்கு ஆகும் சிகிச்சை செலவை அரசே ஏற்கும். இளம்பெண்ணுக்கு அரசு வேலை வழங்குவது குறித்து அரசு பரிசீலனை நடத்தி வருகிறது. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மையுடன் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும்.  இளம்பெண்ணின் பெற்றோர் தற்போது எந்த நிலைமையில் இருப்பார்கள் என்பதை அரசு புரிந்து கொண்டுள்ளது.

சிறப்பு வக்கீல் நியமனம்

  இளம்பெண் மீது திராவகம் வீசிய நாகேஷ் மீது இந்த அரசு எந்த விதமான பாரபட்சமும் இன்றி சட்டப்படி நடவடிக்கை எடுக்கும். அவருக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும். அவருக்கு கிடைக்கும் தண்டனை மற்றவர்களுக்கு ஒரு பாடமாக இருக்க வேண்டும். இந்த வழக்கில் ஆஜராக அரசு தரப்பில் சிறப்பு வக்கீல் நியமிக்கப்பட இருக்கிறார்.

  விரைவு கோர்ட்டில் இந்த வழக்கை நடத்தி, தவறு செய்தவருக்கு விரைவில் தண்டனை பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். இளம்பெண்ணுக்கு 35 சதவீதம் அளவுக்கு தீக்காயம் ஏற்பட்டு இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்களுடன் இணைந்து பெங்களூரு மருத்துவ கல்லூரி டாக்டர்களும் இளம்பெண்ணுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
  இவ்வாறு அவர் கூறினார்.

Next Story