கொரோனா தடுப்பூசி முகாம்
வாய்மேடு பகுதியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
வாய்மேடு:
வாய்மேடு ஊராட்சியில் 28-வது கொரோணா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் மலர் மீனாட்சி சுந்தரம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் மகாலிங்கம் முன்னிலை வகித்தார். வேதாரண்யம் வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை முகாைம பார்வையிட்டு ஆய்வு செய்தார்.முகாமில் முதல் மற்றும் இரண்டாவது தவணை தடுப்பூசி மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதில் ஊராட்சி செயலாளர் அறிவழகன், சுகாதார ஆய்வாளர் அன்பரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதேபோல ஆயக்காரன்புலம் இரண்டாம் சேத்தி ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ராமையன் தலைமையிலும், பஞ்சநதிக்குளம் மேற்கில் ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை சிவகுரு பாண்டியன் தலைமையிலும், .தாணிக்கோட்டகத்தில் ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம் தலைமையிலும், வண்டுவாஞ்சேரியில் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி குமார் தலைமையிலும், அண்ணாபேட்டையில் ஊராட்சி மன்ற தலைவர் ரவிச்சந்திரன் தலைமையிலும், தகட்டூரில் ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு தலைமையிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.
---
Related Tags :
Next Story