இன்று மின் நிறுத்தம்


இன்று மின் நிறுத்தம்
x
தினத்தந்தி 30 April 2022 9:36 PM IST (Updated: 30 April 2022 9:36 PM IST)
t-max-icont-min-icon

நாகையில் இன்று மின் வினியோகம் நிறுத்தப்படுகிறது.

வெளிப்பாளையம்:
நாகை வடக்கு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக இயக்குதலும், பராமரித்தலும் உதவி செயற்பொறியாளர் சித்திவிநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகை துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் மின்பாதையில்  அக்கரைக்குளத்தில் உள்ள புதிய பாலம் கட்டுமான பணிக்கு இடையூறாக உள்ள மின்கம்பத்தை மாற்றும் பணி இன்று(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. இதையொட்டி நாகை, வெளிப்பாளையம், பால்பண்ணைச்சேரி, நாகூர் வங்காரமாவடி ஆகிய பகுதிகளில் இன்று  முற்பகல் 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
----

Next Story