சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?


சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா?
x
தினத்தந்தி 30 April 2022 9:43 PM IST (Updated: 30 April 2022 9:43 PM IST)
t-max-icont-min-icon

மருங்கூர்-நெய்க்குப்பை இடையே சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

திட்டச்சேரி:
மருங்கூர்-நெய்க்குப்பை இடையே சேதமடைந்த சாலை சீரமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.
குண்டும், குழியுமான சாலை
திருமருகல் ஒன்றியம் மருங்கூர், நெய்க்குப்பை ஊராட்சிகளில் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இந்த ஊராட்சிகளை இணைக்கும் சாலை உள்ளது.இந்த சாலை வழியாக மருங்கூர், எரவாஞ்சேரி, துறையூர், கண்ணமங்கலம், கொட்டாரக்குடி பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தினமும் திருமருகல் கடைத்தெரு, வங்கி, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் பல்வேறு தேவைகளுக்காக வந்து செல்கின்றனர்
மேலும் மேற்கண்ட பகுதிகளை சேர்ந்த மாணவ-மாணவிகள் நாகை, காரைக்கால், நன்னிலம் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இந்த சாலை வழியாக சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்று வருகின்றனர்.
இந்தநிலையில் மருங்கூர்-நெய்க்குப்பை இடையே சாலை சேதமடைந்து குண்டும், குழியுமாக காணப்படுகிறது. அருகில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் உள்ள பள்ளத்தில் தேங்கி நிற்பதால் இரவு நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து காயம் அடைகின்றனர்.
நடவடிக்கை
இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருங்கூர்-நெய்க்குப்பை இடையே குண்டும், குழியுமாக காணப்படும் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story