கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்


கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்  17 போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்
x
தினத்தந்தி 30 April 2022 4:25 PM GMT (Updated: 2022-04-30T21:55:20+05:30)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 17 போலீஸ் சப் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள போலீஸ் நிலையங்களில் பணிபுரியும் 17 சப்-இன்ஸ்பெக்டர்களை இடமாற்றம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்த சப்-இன்ஸ்பெக்டர் சேகர் கரியாலூர் போலீஸ் நிலையத்திற்கும், இங்கு பணிபுரிந்து வரும் சப்-இன்ஸ்பெக்டர் துரைராஜ் சங்கராபுரத்துக்கும், கச்சிராயப்பாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் கள்ளக்குறிச்சிக்கும்(ஓடி), கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை உளுந்தூர்பேட்டை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கும், இங்கு பணிபுரிந்து வரும் ஆனந்தி கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். 

அதேபோல் திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுரளி சங்கராபுரம் போலீஸ் நிலையத்திற்கும், திருநாவலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் சடையபிள்ளை, விநாயகம் ஆகியோர் ரிஷிவந்தியம் போலீஸ் நிலையத்திற்கும், திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் திருநாவலூர் போலீஸ் நிலையத்திற்கும், ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்திற்கும், ரிஷிவந்தியம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அசோக்குமார் திருநாவலூர் போலீஸ் நிலையத்திற்கும், சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் கள்ளக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கும், சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சவுக்கத்அலி திருநாவலூர் போலீஸ் நிலையத்திற்கும், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் கச்சிராயப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கும், சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும், எலவனாசூர்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்ர் நரசிம்மஜோதி உளுந்தூர்பேட்டை போலீஸ் நிலையத்திற்கும், திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா பகண்டை கூட்டுரோடு போலீஸ் நிலையத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


Next Story