சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 April 2022 9:58 PM IST (Updated: 30 April 2022 9:58 PM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

வேலூர்

சமத்துவ மக்கள் கட்சி வேலூர் மாவட்டம் சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே ஆர்ப்பாட்டம் இன்று நடந்தது.  

வேலூர் மண்டல செயலாளர் ஞானதாஸ் தலைமை தாங்கினார். வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் சசிகுமார், வேலூர் வடக்கு மாவட்ட செயலாளர் பழனி, ராணிப்பேட்டை கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெகன், திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 வேலூர் மண்டல தலைமை நிலைய செயலாளர் பிரேம்குமார் மற்றும் பலர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கட்டுப்படுத்தி குறைக்க நடவடிக்கை எடுக்கக்கோரியும், பெட்ரோலிய பொருட்களை ஜி.எஸ்.டி. வரி விதிப்பிற்குள் கொண்டு வரக்கோரியும் கோஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் வேலூர் மாநகர இளைஞரணி செயலாளர் விக்னேஸ்வரன் நன்றி கூறினார்.

Next Story