உளுந்தூர்பேட்டை அருகே மணல் கடத்தல் லாரி பறிமுதல் டிரைவர் உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு
உளுந்தூர்பேட்டை அருகே மணல் கடத்தல் லாரி பறிமுதல் டிரைவர் உரிமையாளருக்கு போலீஸ் வலைவீச்சு
உளுந்தூர்பேட்டை
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள நல்லாளகுப்பம் காட்டுப்பகுதியில் மணல் கடத்தி வருவதாக திருநாவலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெகதீசன் தலைமையிலான போலீசார் குறிப்பிட்ட பகுதியில் தீவிர ரோந்து பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை போலீசார் வழி மறித்தபோது லாரியை நடுரோட்டில் நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடிவிட்டார். பின்னர் லாரியை போலீசார் சோதனை செய்தபோது அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து லாரியை பறிமுதல்செய்த போலீசார் இது குறித்து வழக்குப்பதிவுசெய்து தப்பி ஓடிய லாரி டிரைவர் மற்றும் அதன் உரிமையாளர் ஆகியோரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story