சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 30 April 2022 4:34 PM GMT (Updated: 2022-04-30T22:04:58+05:30)

பெட்ரோல்-டீசல் விலை உயர்வை குறைத்திட வலியுறுத்தி சமத்துவ மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடலூர், 

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை குறைத்திட மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில்  அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் மண்டல அமைப்பு செயலாளர் செந்தில் முருகன் தலைமை தாங்கி, கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரையாற்றினார்.
கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி, தெற்கு மாவட்ட செயலாளர் சூரிய பிரசாத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் மத்திய மாவட்ட பொறுப்பாளர் ரகு ராத் வரவேற்றார். இதில் மாவட்ட செயலாளர்கள் (விழுப்புரம் கிழக்கு) தசரதன், (விழுப்புரம் வடக்கு) ஆறுமுகம் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்‌. முடிவில் கடலூர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் மயில்வேலன் நன்றி கூறினார்.

Next Story