தோட்டக்கலைத்துறை மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் துணை இயக்குனர் தகவல்
தோட்டக்கலைத்துறை மூலம் திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம் துணை இயக்குனர் தகவல்
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி தோட்டக்கலை துணை இயக்குனர் இந்திரா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசால் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் அரசு தோட்டக்கலைப் பண்ணை அ.சாத்தனூரில் சான்றிதழுடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி நடைபெற உள்ளது. நிலம் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு பூங்கொத்து, பூ அலங்காரம் செய்தல், நுண்ணீர் பாசன அமைப்பு நிறுவுதல், தேனி வளர்ப்பு ஆகிய இனங்களில் மொத்தம் 40 பேருக்கு 30 நாட்கள் அரசு தோட்டக்கலை பண்ணையில் பயிற்சி அளிக்கப்படும். இதில் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
இப்பயிற்சியில் பங்கேற்க ஆர்வமுள்ள கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சோ்ந்தவர்கள் தோட்டக்கலைத் துறையின் www.tnhorticulture.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோடு, ஏமப்பேர், தோட்டக்கலை துணை இயக்குனர் அலுவலகத்தில் வருகிற 13-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். பயிற்சியில் பங்கு பெறும் பயிற்சியாளர்களுக்கு 30 நாட்களுக்கு நாளொன்றுக்கு போக்குவரத்துக்காக ரூ.100 வீதம் அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். குறைந்தபட்சம் 85 சதவீதம் வருகை பதிவு உள்ளவர்கள் மட்டுமே தேர்வு எழுத அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story