நாம் தமிழர் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம்
கடலூரில் நாம் தமிழர் கட்சியினர் நூதன ஆர்ப்பாட்டம் நடந்தது.
கடலூர், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் கடலூர் தலைமை தபால் நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு நாடாளுமன்ற பொறுப்பாளர் தமிழ் தலைமை தாங்கினார். தொகுதி இணை செயலாளர் செந்தில்குமார், தொகுதி பொருளாளர் சாந்தகுமார், நகர தலைவர்கள் சுரேந்தர், தெய்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சங்கர் வரவேற்றார்.சிறப்பு அழைப்பாளர்களாக மாநில ஒருங்கிணைப்பாளர் அமுதா நம்பி, மாவட்ட செயலாளர் சாமிரவி ஆகியோர் கலந்து கொண்டு அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, சுங்கச்சாவடி கட்டண உயர்வு மற்றும் இந்தி மொழி திணிப்பு ஆகியவற்றை கண்டித்து கண்டன உரையாற்றினர். அப்போது ஒருவர் ஜெகன்மோகினி போன்று வேட்மணிந்து சிலிண்டருக்கு பதிலாக அடுப்பில் கால்களை வைத்து வடை சுடுவது போன்று நடித்து நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.இதில் நகர இணை செயலாளர் சரவணன், ஒன்றிய பொறுப்பாளர்கள் ராஜா, சுரேன் ராமமூர்த்தி, ஜானகிராமன், நகர இளைஞர் பாசறை பொறுப்பாளர்கள் சுபாஷ், பிரசன்னா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story