திருவிளக்கு பூஜை


திருவிளக்கு பூஜை
x
தினத்தந்தி 30 April 2022 4:44 PM GMT (Updated: 2022-04-30T22:14:20+05:30)

ஆறுமுகநேரி லட்சுமி மாநகரம் கோவில் கொடை விழாவில் திருவிளக்கு பூஜை நடந்தது.

ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி லட்சுமி மாநகரம் நாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட மாரியம்மன் கோவில் கொடை விழா வருகிற 3-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் கணபதி ஹோமத்துடன் விழா தொடங்கியது. தொடர்ந்து திருவிளக்கு பூஜை, அம்மன் சுப்பிரமணியராக காட்சி அளித்தல் நடைபெற்றது. நேற்று காலை நித்திய பூஜையும், அம்மன் கிருஷ்ணராக காட்சிய அளித்தலும் நடைபெற்றது.
நாளை (திங்கட்கிழமை) கடலுக்கு சென்று தீர்த்தம் எடுத்து வரப்படுகிறது. 3-ந் தேதி மதியம் 2 மணிக்கு அம்மன் மஞ்சள் நீராடி ஆற்றுக்கு சென்று திரும்பும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 9 மணிக்கு அம்மனுக்கு பக்தர்கள் நேர்த்திக்கடனாக முளைப்பாரி, ஆயிரங்கண் பானை, மாவிளக்கு பெட்டி உள்ளிட்ட நேமிசங்கள் எடுத்து கோவிலுக்கு வருகின்றனர். நள்ளிரவு 12 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், அம்மன் இதில் மாரியம்மனாக காட்சியளித்தலும் நடைபெறும். கொடை விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் தனசேகரன் நாடார், ராதா கிருஷ்ணன் நாடார் மற்றும் கோவில் கமிட்டியினர் செய்துள்ளனர்.

Next Story