கோடை வெயிலால் நீர்மட்டம் குறைந்து வரும் ஆண்டவர் நகர் குளம்


கோடை வெயிலால் நீர்மட்டம் குறைந்து வரும் ஆண்டவர் நகர் குளம்
x
தினத்தந்தி 30 April 2022 10:22 PM IST (Updated: 30 April 2022 10:22 PM IST)
t-max-icont-min-icon

முத்தூர் பகுதிகளில் சுட்டெரிக்கும் கோடை வெயிலினால் ஆண்டவர் நகர் குளத்தின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

முத்தூர்
முத்தூர் பகுதிகளில் சுட்டெரிக்கும் கோடை வெயிலினால் ஆண்டவர் நகர் குளத்தின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.
ஆண்டவர்நகர் குளம்
 முத்தூர் அருகே உள்ள வேலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட பெரிய காங்கயம்பாளையம் கிராம பகுதியில் ஆண்டவர் நகர் குளம் ஒன்று உள்ளது. இந்த குளத்திற்கு பலத்த மழை காலங்கள் மற்றும் கீழ்பவானி பாசன கால்வாய்களில் தண்ணீர் செல்லும் நேரங்களில் வெளியேறும் அதிக உபரி நீர் காரணமாக அதிக அளவில் நீர் வரத்து இருக்கும். இந்த ஆண்டவர் நகர் குளம் நிரம்பி அதிக அளவில் நீர் மட்டம் உயர்ந்து இருக்கும் போது பெரிய காங்கயம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளான ஆண்டவர் நகர், சின்ன காங்கயம்பாளையம், ஆலாம்பாளையம், பாறையூர், சத்யா நகர், பொய்யேரிமேடு உட்பட பல்வேறு கிராம பகுதிகளில் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகளின் நீர்மட்டம் அதிக அளவு உயர்ந்து காணப்படும்.
 கடந்த ஆண்டு  பெய்த  மழையின் காரணமாகவும், கீழ்பவானி பாசன கால்வாயில் வெளியேறிய உபரி நீரினாலும் இந்த குளத்திற்கு நீர் வரத்து ஏற்பட்டது. இதனால் இந்த ஆண்டவர் நகர் குளம் கடந்த 5 மாத காலமாக நிரம்பி யது. 
சுட்டெரிக்கும் வெயில் 
இந்த நிலையில்  கோடை வெயிலின் வெப்பத்தின் உக்கிர தாக்கம் காரணமாக  ஆண்டவர் நகர் குளத்தில் தேங்கி உள்ள தண்ணீர் வேகமாக குறைந்து வருகிறது. தொடங்கும் வடகிழக்கு பருவ மழையினால் இந்த குளத்திற்கு மீண்டும் நீர் வரத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

Next Story