போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும்
லெட்சுமாங்குடி கால்நடை ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கூத்தாநல்லூர்:
லெட்சுமாங்குடி கால்நடை ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
லெட்சுமாங்குடி கால்நடை ஆஸ்பத்தி்ரி
கூத்தாநல்லூர் அருகே உள்ள லெட்சுமாங்குடியில் கால்நடை ஆஸ்பத்திரி உள்ளது. கூத்தாநல்லூர், லெட்சுமாங்குடி, மரக்கடை, வடகோவனூர், தென்கோவனூர், ஓவர்ச்சேரி, குடிதாங்கிச்சேரி, அரசூர், கோரையாறு, அதங்குடி, வெள்ளக்குடி, விழல்கோட்டகம், சித்தாம்பூர், பண்டுதக்குடி, திருராமேஸ்வரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள மக்கள், தங்களது வாழ்வாதாரத்தை பெருக்கி கொள்ளும் வகையில் வீடுகளில் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளை வளர்த்து வருகின்றனர்.
இந்த கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக, லெட்சுமாங்குடி கால்நடை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக கால்நடை ஆஸ்பத்திரியில் போதிய டாக்டர்கள் இல்லை என்றும், பல நேரங்களில் டாக்டர் இல்லாமல் ஆஸ்பத்திரி பூட்டியே கிடக்கிறது.
போதிய டாக்டர்களை நியமிக்க வேண்டும்
இதனால் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை கூட பெற முடியாமல் கால்நடை வளர்ப்போர் அவதி அடைந்து வருகி்ன்றனர். மேலும் கால்நடைகள் பல சிகிச்சை பெற முடியாமல் இறந்து விடுகின்றன.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் லெட்சுமாங்குடி கால்நடை ஆஸ்பத்திரிக்கு போதிய டாக்டர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story