அய்யன் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்


அய்யன் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள்
x
தினத்தந்தி 30 April 2022 5:01 PM GMT (Updated: 2022-04-30T22:31:11+05:30)

வடலூர் அய்யன் ஏரியில் செத்து மிதக்கும் மீன்கள் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனா்.


வடலூர், 

வடலூரில் மிகப்பெரிய அய்யன் ஏரி உள்ளது. இந்த ஏரியில் உள்ள மீன்கள் திடீரென செத்து மிதந்தன. இதனால் அப்பகுதியில் கடும் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். கோடைக்காலம் என்பதால் ஏரியில் தண்ணீர் வறண்டு வருவதால் ஏரியில் உள்ள மீன்கள் செத்து மிதக்கிறது. அவ்வாறு செத்து கிடக்கும் மீன்களை உடனடியாக அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story