விழுப்புரத்தில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச்சங்க மாநில செயற்குழு கூட்டம்
விழுப்புரத்தில் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச்சங்க மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
விழுப்புரம்,
விழுப்புரத்தில் அனைத்திந்திய பி.எஸ்.என்.எல். ஓய்வூதியர் நலச்சங்க தமிழ்மாநில சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில தலைவர் ராமராவ் தலைமை தாங்கினார்.
கடலூர் மாவட்ட செயலாளர் அசோகன் வரவேற்றார். அகில இந்திய சங்க துணைத்தலைவர் சுகுமாறன், துணை பொதுச்செயலாளர் முத்தியாலு, துணைத்தலைவர் கோபாலகிருஷ்ணன், தமிழ்மாநில செயலாளர் வெங்கடாஜலம் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில் 1.1.2017 முதல் பி.எஸ்.என்.எல். ஓய்வூதியத்தை மாற்றி அமைக்க அதற்கான உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும், மத்திய அரசின் சுகாதார திட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகளில் உள்நோயாளியாக சிகிச்சை பெற வழங்கப்பட்ட அடையாள அட்டையை சமர்ப்பித்து நேரடியாக அனுமதிக்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்,
2019 முதல் வழங்கப்படாமல் உள்ள ஓய்வூதியர்களுக்கான மருத்துவ பலன்களை உடனடியாக வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இக்கூட்டத்தில் தமிழ்மாநில முழுவதிலும் இருந்து மாவட்ட சங்க செயலாளர்கள், நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முடிவில் விழுப்புரம் பகுதி செயலாளர் கணேசன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story