ஜனதா தளம் (எஸ்) சார்பில் போட்டியிட ஜி.டி தேவேகவுடா-மகனுக்கு சீட்- சா.ரா.மகேஷ் எம்.எல்.ஏ. தகவல்


ஜனதா தளம் (எஸ்) சார்பில் போட்டியிட ஜி.டி தேவேகவுடா-மகனுக்கு சீட்- சா.ரா.மகேஷ் எம்.எல்.ஏ. தகவல்
x
தினத்தந்தி 30 April 2022 10:37 PM IST (Updated: 30 April 2022 10:37 PM IST)
t-max-icont-min-icon

ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் போட்டியிட விரும்பினால் ஜி.டி.ேதவேகவுடா மற்றும் அவரது மகனுக்கு மைசூரு மாவட்டத்தில் சீட் வழங்கப்படும் என்று அக்கட்சியில் மூத்த தலைவர்களில் ஒருவரான சா.ரா.மகேஷ் எம்.எல்.ஏ. கூறினார்.

மைசூரு:

ஜி.டி.தேவேகவுடாவிற்கு சீட்

  மைசூரு மாவட்டம் கே.ஆர் நகரில் ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் எம்.எல்.ஏவான சா.ரா மகேஷ் நிருபர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

ஜி.டி.தேவேகவுடா ஜனதா தளம் (எஸ்) கட்சியில் இருந்தாலும் அவர் எந்தவிதமான நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வருகிறார். மாறாக காங்கிரஸ் கட்சியில் சேரப்போவதாக ஆர்வம் காட்டி வருகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த முடிவு அவரது தனிப்பட்ட சுதந்திரம். எந்த கட்சியில் வேண்டும் என்றாலும் சேர்ந்து கொள்ளட்டும். 

அது குறித்து எந்த வருத்தமும் இல்லை. ஆனால் இதுவரை அவர் தரப்பில் எந்த ராஜினாமா கடிதமும் வழங்கப்படவில்லை. தற்போது வரை அவர் ஜனதா தளம் (எஸ்) கட்சியில்தான் இருக்கிறார். இதில் எந்த மாற்றமும் இல்லை.

ஜனதா தளம் (எஸ்) சார்பில் போட்டி...

  தேர்தலில் போட்டியிடுவது அவரது கையில்தான் உள்ளது. ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் போட்டியிட சம்மதித்தால், சாமுண்டீஸ்வரி தொகுதி ஜி.டி தேவேகவுடாவிற்கும், உன்சூரு தொகுதி அவரது மகன் ஹரீஷ் கவுடாவிற்கும் வழங்கப்படும். இவர்களுக்காக ஜனதா தளம் (எஸ்) கட்சி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்த சோமசேகரை மனம் மாற்றம் அடைய செய்துள்ளோம். எனவே முடிவு அவர்கள் கையில்தான் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story