தேசிய நெடுஞ்சாலையோரம் ஆம்னி பஸ்களை நிறுத்த கூடாது


தேசிய நெடுஞ்சாலையோரம் ஆம்னி பஸ்களை நிறுத்த கூடாது
x
தினத்தந்தி 30 April 2022 10:41 PM IST (Updated: 30 April 2022 10:41 PM IST)
t-max-icont-min-icon

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே தேசிய நெடுஞ்சாலையோரம் ஆம்னி பஸ்களை நிறுத்த கூடாது

வேலூர்

வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் ஆம்னி பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கி செல்கின்றன. 

இதனால் அந்த பகுதியில் எதிர்பாராத விதமாக விபத்துகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல்பாண்டியனுக்கு புகார்கள் வந்தன. 

அதையடுத்து கலெக்டர், சாலை பாதுகாப்பு கூட்டத்தொடரில் தேசிய நெடுஞ்சாலையோரம் வாகனங்களை நிறுத்த கூடாது என்று விழிப்புணர்வு ஏற்படுத்தும்படி தேசிய நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்து போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

அதன்பேரில் வேலூர் கிரீன் சர்க்கிள் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி இன்று நடந்தது.

 சாலை பாதுகாப்பு அலுவலர் பிரகாஷ், பள்ளிகொண்டா சுங்கச்சாவடி அலுவலர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி-வாலாஜாபேட்டை சுங்கச்சாவடி சாலை பாதுகாப்பு மேலாளர் ஜஸ்டின் சாம்சன், வேலூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணையன் ஆகியோர் தலைமை தாங்கி அந்த வழியாக வந்த ஆம்னி பஸ்கள், கனரக வாகன ஓட்டிகளிடம் நெடுஞ்சாலையோரம் வாகனங்களை நிறுத்த கூடாது என்று துண்டுப்பிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 

மேலும் கிரீன் சர்க்கிள் அருகே நெடுஞ்சாலையோரம் ஆம்னி பஸ்கள், கனரக வாகனங்கள் நிறுத்த கூடாது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்ற வாசகங்கள் எழுதப்பட்டிருந்த விழிப்புணர்வு இரும்பு பலகையும் வைக்கப்பட்டன.
========
சைடில் கட் செய்து 1½ காலம்

Next Story