நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டியதால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
மகளிர் குழு கடனுக்கான மாத தவணை செலுத்த தாமதமானதால் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டினர். இதனால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
வலங்கைமான்:
மகளிர் குழு கடனுக்கான மாத தவணை செலுத்த தாமதமானதால் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டினர். இதனால் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தொழிலாளி
திருவாரூர் மாவட்டம் வலங்கைமானை அடுத்த கீழ அமராவதி சிவன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் சரவணன் (வயது37). கூலித்தொழிலாளி.
கும்பகோணம் பகுதியில் இயங்கி வரும் ஒரு நிதி நிறுவனத்தில் சரவணன் மனைவி ரூ.50 ஆயிரம் மகளிர் குழு கடனாக 4 மாதங்களுக்கு முன்பு பெற்றுள்ளார். இதில் 3 மாதத்திற்காக தவணை தொகை செலுத்தினார். ஆனால் கடந்த ஏப்ரல் மாதத்திற்காக தவணை தொகை செலுத்த தாமதமாகி உள்ளது.
விஷம் குடித்து தற்கொலை
நேற்று நிதி நிறுவன ஊழியர்கள் சரவணன் வீட்டிற்கு வந்து மாத தவணை தொகையை வசூல் செய்ய முயன்றனர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அ்பபோது நிதி நிறுவன ஊழியர்கள் சரவணனை மிரட்டியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த அவர் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை(விஷம்) குடித்தார். இதில் மயங்கி விழுந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
விசாரணை
இதுகுறித்து வலங்கைமான் போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மகளிர் குழு கடனுக்காக மாத தவணை ெதாகை செலுத்த தாமதம் ஆனதால் நிதி நிறுவன ஊழியர்கள் மிரட்டியதில் தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
--
Related Tags :
Next Story