விழுப்புரம் அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு


விழுப்புரம் அருகே அரசு பஸ் கண்ணாடி உடைப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 30 April 2022 5:21 PM GMT (Updated: 2022-04-30T22:51:15+05:30)

விழுப்புரம் அருகே அரசு பஸ் கண்ணாடி உடைக்கப்பட்டது.


விழுப்புரம், 

விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து மரகதபுரம் நோக்கி நேற்று மாலை அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அத்தியூர்திருவாதியை சேர்ந்த சதானந்தம் (வயது 51) என்பவர் பஸ்சை ஓட்டிச்சென்றார். 

இந்த பஸ் வழுதரெட்டி என்ற இடத்தில் சென்றபோது அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் சில பயணிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் புறப்பட்டது. அப்போது திடீரென மர்ம நபர் ஒருவர், பஸ்சின் பின்பக்க கண்ணாடியை கல்வீசி தாக்கி உடைத்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். 


 இதுகுறித்து சதானந்தம் அளித்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story