திருத்துறைப்பூண்டியில் உறவினர்கள் சாலைமறியல்


திருத்துறைப்பூண்டியில்  உறவினர்கள் சாலைமறியல்
x
தினத்தந்தி 30 April 2022 10:55 PM IST (Updated: 30 April 2022 10:55 PM IST)
t-max-icont-min-icon

பெண் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருத்துறைப்பூண்டியில் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருத்துறைப்பூண்டி:
பெண் சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி திருத்துறைப்பூண்டியில் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் 1 மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
தூக்கில் பிணம்
திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தானம்தாங்கியை  சேர்ந்தவர் காயத்ரி(வயது20). இவர் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள தண்டலச்சேரி அரசு கல்லூரியில் படித்து வந்தார். 
கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் போது இவருக்கும், வரப்பியத்தை சேர்ந்த டிரைவர் பார்த்திபன்(25) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. 
கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 6 மாதத்தில் ஒரு பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் காயத்ரி வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். 
கோட்டாட்சியர் விசாரணை 
இதுகுறித்து காயத்ரி அண்ணன் மகேந்திரன் திருத்துறைப்பூண்டி போலீஸ்நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயத்ரி உடலை மீட்டு திருவாரூர் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். 
காயத்ரிக்கு திருமணமாகி 1½ ஆண்டுகளே ஆவதால் ே்காட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.  
சாலைமறியல்
நேற்று மாலை பிரேத பரிசோதனை முடிந்து திருவாரூரில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் காயத்ரி உடலை ஏற்றிக்கொண்டு அவரது உறவினர்கள் திருத்துறைப்பூண்டிக்கு வந்து கொண்டிருந்தனர்.
அப்போது திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் வேலூர் பாலம் அருகில் காயத்ரி சாவுக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி  ஆம்புலன்சில் அவரது உடலை வைத்து கொண்டு காயத்ரியின் அண்ணன் மகேந்திரன், சகோதரி கவுசல்யா ஆகியோரின் தலைமையில் உறவினர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். 
போக்குவரத்து பாதிப்பு 
தகவல் அறிந்ததும் திருத்துறைப்பூண்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 
அதில்  கோட்டாட்சியர் விசாரணை நடைபெறுவதால் விசாரணை முடிந்த பிறகு  உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது. இதனால் திருத்துறைப்பூண்டி- திருவாரூர் சாலையில் 1  மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
--


Next Story