கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அண்ணாசிலை அருகே நாம் தமிழர் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல், கியாஸ் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதற்கு கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கரு.பிரபாகரன் தலைமை தாங்கினார். இதில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தி வருவதால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆகவே, அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story