மத்தூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி மாற்றுத்திறனாளி சாவு


மத்தூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி மாற்றுத்திறனாளி சாவு
x
தினத்தந்தி 30 April 2022 10:56 PM IST (Updated: 30 April 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

மத்தூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி மாற்றுத்திறனாளி இறந்தார்.

மத்தூர்,:
மத்தூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் மூழ்கி மாற்றுத்திறனாளி இறந்தார்.
மாற்றுத்திறனாளி
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள நாகம்பட்டியை சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது27). மாற்றுத்திறனாளி. இவரது உறவினரின் குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சிக்காக காவேரிப்பட்டணம் அருகே உள்ள ஆவத்துவாடி தென்பெண்ணை ஆற்றின் அருகே உள்ள குலதெய்வ கோவிலுக்கு குடும்பத்தினருடன் சென்றார். அங்கு உள்ள தென்பெண்ணை ஆற்றில் குளிக்க சென்ற ராஜ்குமார் வெகுநேரமாக வரவில்லை. 
இதனால் உறவினர்கள் தென்பெண்ணை ஆற்றுக்கு சென்று தேடினர். அப்போது ராஜ்குமார் தண்ணீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரது உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். இதுகுறித்து நாகரசம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
 சோகம்
அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். உறவினர் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்ற மாற்றுத்திறனாளி தென்னை ஆற்றில் மூழ்கி இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Tags :
Next Story