தேன்கனிக்கோட்டையில் கஞ்சா கடத்திய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது


தேன்கனிக்கோட்டையில் கஞ்சா கடத்திய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 30 April 2022 10:56 PM IST (Updated: 30 April 2022 10:56 PM IST)
t-max-icont-min-icon

தேன்கனிக்கோட்டையில் கஞ்சா கடத்திய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தேன்கனிக்கோட்டை:
தேன்கனிக்கோட்டையில் கஞ்சா கடத்திய 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கஞ்சா கடத்தல்
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை கோட்டைவாசல் பகுதியில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதி போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது 300 கிலோ கஞ்சா கடத்தியது தெரிந்தது. 
இதையடுத்து ஆந்திர மாநிலம் சித்தூர் தாலுகா பலமநேர் பஜார் தெருவை சேர்ந்த ஹரீஸ் (வயது 50), திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டி பகுதியை சேர்ந்த லோகேஷ் (31), ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே உள்ள ரெவின்யூ காலனி ஸ்ரீடிநகரை சேர்ந்த ஆகுல ஐயப்பரெட்டி (68), தேன்கனிக்கோட்டை அடுத்த பிக்கனப்பள்ளியை சேர்ந்த முனியப்பா என்ற ஜடையன்(48) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். 
குண்டர் சட்டத்தில் கைது
பின்னர் அவர்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் கஞ்சா கடத்தல் வழக்கில் ஹரீஸ், முனியப்பா ஆகிய 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரேஜ்குமார் தாக்கூர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து அவர்கள் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி உத்தரவிட்டார்.

Next Story