குருபரப்பள்ளி அருகே விபத்தில் வாலிபர் சாவு


குருபரப்பள்ளி அருகே விபத்தில் வாலிபர் சாவு
x
தினத்தந்தி 30 April 2022 5:26 PM GMT (Updated: 2022-04-30T22:56:27+05:30)

குருபரப்பள்ளி அருகே விபத்தில் வாலிபர் இறந்தார்.

கிருஷ்ணகிரி:
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி தாலுகா கலந்திரா பகுதியை சேர்ந்தவர் கோபி. இவரது மகன் விஷ்ணு (வயது 19). இவர் தனது புதிய மோட்டார் சைக்கிளில் குருபரப்பள்ளி அருகே சுபேதார்மேடு பக்கமாக வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற நெல் அரைக்கும் எந்திரத்தின் மீது மோட்டார்சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த விஷ்ணு சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்து குறித்து மகராஜகடை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Tags :
Next Story