தர்மபுரியில் போஸ்டர் ஒட்டியபோது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது


தர்மபுரியில் போஸ்டர் ஒட்டியபோது  போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது
x
தினத்தந்தி 30 April 2022 10:57 PM IST (Updated: 30 April 2022 10:57 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரியில் போஸ்டர் ஒட்டியபோது போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

தர்மபுரி:
தர்மபுரி பஸ் நிலையம் அருகே உள்ள ராஜகோபால் பூங்கா பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் உள்ள சுவரில் சிலர் மே தின போஸ்டர்களை ஒட்டி கொண்டிருந்தனர். அந்த போஸ்டரில் மத்திய அரசை கண்டிக்கும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த போஸ்டர்கள் ஒட்ட உரிய அனுமதி பெறப்பட்டதா? என்று போலீசார் கேட்டனர். அப்போது போஸ்டர் ஒட்டியவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் போலீசாருக்கு மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி கொடுத்த புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து நாயக்கன்கொட்டாய் பகுதியை சேர்ந்த சித்தானந்தம் (வயது 69), பாலகிருஷ்ணன் (45), டி.துறிஞ்சிபட்டியை சேர்ந்த வேடி (55) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

Next Story