பாலக்கோடு அருகே கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை


பாலக்கோடு அருகே கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
x
தினத்தந்தி 30 April 2022 10:57 PM IST (Updated: 30 April 2022 10:57 PM IST)
t-max-icont-min-icon

பாலக்கோடு அருகே கடன் தொல்லையால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாலக்கோடு:
பாலக்கோடு அருகே உள்ள பி.கொல்லஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது29). திருமணம் ஆகவில்லை. இவர் தறிபட்டறை நடத்தி வந்தார். தொழிலுக்கு வாங்கிய கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. கடன் தொல்லையால் மனமுடைந்த பிரபாகரன் நேற்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து பாலக்கோடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story