தர்மபுரி வட்டார கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டம்
தர்மபுரி வட்டார கல்வி அலுவலகத்தை ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தர்மபுரி:
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தர்மபுரி வட்டார கிளையை சேர்ந்த ஆசிரியர்கள் பள்ளிகள் சார்ந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி வட்டார கல்வி அலுவலகத்தை திடீரென முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆசிரியர்கள் வட்டார கல்வி அலுவலகத்தை தொலைபேசி மூலம் அணுகும்போது பிரச்சினைகளை கேட்டறிந்து உரிய தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினார்கள். இது தொடர்பாக கல்வி அலுவலர்கள் ஆசிரியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட ஆசிரியர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story