அவினாசி லிங்கேசுவரர் கோவிலில் திருகல்யாண உற்சவம் நடத்துவதில் பிரச்சினை


அவினாசி லிங்கேசுவரர் கோவிலில் திருகல்யாண உற்சவம் நடத்துவதில் பிரச்சினை
x
தினத்தந்தி 30 April 2022 11:01 PM IST (Updated: 30 April 2022 11:01 PM IST)
t-max-icont-min-icon

அவினாசி லிங்கேசுவரர் கோவிலில் திருகல்யாண உற்சவம் நடத்துவதில் யாருக்கு உரிமை உள்ளது என்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக செயல் அலுவலரிடம் ஒரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அவினாசி
அவினாசி லிங்கேசுவரர் கோவிலில் திருகல்யாண உற்சவம் நடத்துவதில் யாருக்கு உரிமை உள்ளது என்ற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக செயல் அலுவலரிடம் ஒரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். 
அவினாசிலிங்கேசுவரர் கோவில்
அவினாசியில் புகழ் பெற்ற அவினாசி லிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவில் சித்திரை திருவிழா தேேராட்டம் ஒவ்வொரு ஆண்டும் வெகுவிமரிசையாக நடக்கும். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று கட்டுப்பாடு காரணமாக தேேராட்டம் நடக்கவில்லை.
 இந்த ஆண்டு அவினாசிலிங்கேசுவரர் கோவில் சித்திரை திருவிழா தேேராட்டத்தை சிறப்பாக நடத்த கோவில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. அதன்படி வருகிற 12-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது. தேரோட்டம் நடக்கும் முன்பாக 10-ந் தேதி கோவிலில் திருகல்யாண உற்சவம் நடக்கும்.
ஆலோசனை கூட்டம்
இது தொடர்பாக ஆலோசனை கூட்டம் கோவில் செயல் அலுவலர் தலைமையில் கோவில் வளாகத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்ட இதில் ஒரு தரப்பினர் ஆண்டுதோறும் திருக்கல்யாண நிகழ்ச்சி நாங்கள்தான் நடத்தி வருகிறோம். ஆனால் இந்த ஆண்டு திருகல்யாண உற்சவ நிகழ்ச்சியை வேறுசிலர் நடத்த உள்ளதாக தெரிகிறது. முறைப்படி திருக்கல்யாண வைபவ நிகழ்ச்சி நடத்தும் உரிமை எங்களுக்குதான் உள்ளது. மீறி வேறு நபர்கள் இந்த விசயத்தில் தலையிட்டால் வீண் பிரச்சினை ஏற்படும்.. எனவே வேறு யாரும் இதில் தலையிடக்கூடாது என்று கோவில் செயல் அலுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. 
இதுகுறித்த கோவில் நிர்வாகத்தினர் கூறுகையில் “இதுபற்றி பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவு எடுப்பதாக” தெரிவித்துள்ளார்.

Next Story