நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தென்காசியில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தென்காசி:
தென்காசி புதிய பஸ் நிலையம் அருகில் நாம் தமிழர் கட்சி சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வைக் கண்டித்தும், தமிழகத்தில் இருந்து கேரள மாநிலத்துக்கு கனிமவளங்களை கடத்துவதைக் கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாடாளுமன்ற தொகுதி செயலாளர் அருண் சங்கர் தலைமை தாங்கினார். மாநில மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் சங்கீதா ஈசாக் முன்னிலை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் பசும்பொன், மாநில ஒருங்கிணைப்பாளர் மதிவாணன், தென்காசி தெற்கு மாவட்ட தலைவர் கணேசன், நெல்லை மேற்கு மாவட்ட செயலாளர் தினகரன், தென்காசி தொகுதி தலைவர் அழகுபாண்டியன், செயலாளர் வின்சென்ட் ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story