பல்வேறு இ்டங்களில் திருடிய 3 பேர் கைது


பல்வேறு இ்டங்களில் திருடிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 1 May 2022 2:35 AM IST (Updated: 1 May 2022 2:35 AM IST)
t-max-icont-min-icon

கும்பகோணம் பகுதியில் பல்வேறு இ்டங்களில் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 17 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

கும்பகோணம்;
கும்பகோணம் பகுதியில் பல்வேறு இ்டங்களில் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 17 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. 
விசாரணை 
கும்பகோணம் தாலுகா மற்றும் கிழக்கு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கொள்ளையில்  ஈடுபட்டவர்களை  கைது செய்ய போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.  தனிப்படை போலீசார் கொள்ளையர்களை  தேடி வந்தனர். இந்தநிலையில், கும்பகோணம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், தனிப்படை சப்- இன்ஸ்பெக்டர் கீர்த்திவாசன் மற்றும் போலீசாருக்கு கொள்ளையர்கள் குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. இதன்போில், கும்பகோணம் தாலுகா போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் சந்தேகத்துக்குரிய  வகையில் நின்று கொண்டிருந்த 3 வாலிபர்களை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். 
கைது
விசாரணையில் அவர்கள் கும்பகோணம் அருகே உள்ள கருப்பூர், சேதுராமன் நகரை சேர்ந்த பரத்(வயது30), சின்னம்மாகல்லறை பகுதியை சேர்ந்த கவியரசன்(34), இதே பகுதியை சேர்ந்த கார்த்தி(36) என   தெரியவந்தது. மேலும் அவர்கள் கும்பகோணம் பகுதியில் தொடர் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்ததும் போலீசாருக்கு தெரியவந்தது. 
இதைத்தொடர்ந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்த தனிப்படை போலீசார் அவர்களிடமிருந்து 17 பவுன் நகைகள், 3 கிலோ வெள்ளி பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Next Story