சமத்துவ மக்கள் கட்சி ஆர்ப்பாட்டம்
மதுரை பழங்காநத்தத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை,
மதுரை பழங்காநத்தத்தில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் கியாஸ் விலை உயர்வு, சொத்து வரி உயர்வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் வக்கீல் அணி மாநில துணை செயலாளர் ரவி, வணிகர் அணி மாநில துணைச்செயலாளர் கதிரேசன், மதுரை மாவட்ட செயலாளர் புறா மோகன், வடக்கு மாவட்ட செயலாளர் பாலமேடு கார்த்தி, கிழக்கு மாவட்ட செயலாளர் சிவாஜி கணேசன், தேனி மாவட்ட செயலாளர் கடமலைக்குண்டு காமராஜ், தேனி தெற்கு மாவட்ட செயலாளர் முருகன், மதுரை தெற்கு மாவட்ட பொருளாளர் இஸ்மாயில், மாநில மகளிர் அணி செயலாளர் பஞ்சு ஆகியோர் உள்பட நிர்வாகிகள், தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story