6 வயது சிறுமியை கற்பழித்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை
6 வயது சிறுமியை கற்பழித்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து பெங்களூரு கோர்ட்டு தீர்ப்பு வழங்கி உள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு சென்னகேசவாநகரில் வசிக்கும் தம்பதிக்கு 6 வயதில் மகள் உள்ளாா். அந்த சிறுமியை, பக்கத்து வீட்டில் வசிக்கும் நாகராஜ் என்பவர் கடந்த 2 ஆண்டுக்கு முன்பு கற்பழித்ததாக கூறப்படுகிறது. நெய் வாங்க சென்ற சிறுமியை வீட்டிற்குள் கடத்தி சென்று நாகராஜ் கற்பழித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பரப்பனஅக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்திருந்தார்கள். இதுதொடர்பான வழக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் நடைபெற்றது.
வழக்கு விசாரணை நிறைவு பெற்ற நிலையில் நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது 6 வயது சிறுமியை நாகராஜ் கடத்தி கற்பழித்திருப்பது ஆதாரத்துடன் நிரூபணமாகி உள்ளது. அதனால் நாகராஜிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story