புனித உபகார அன்னை ஆலய தேரோட்டம்
கள்ளப்பெரம்பூர் புனித உபகார அன்னை ஆலய தேரோட்டம் நேற்று நடந்தது.
வல்லம்;
கள்ளப்பெரம்பூர் புனித உபகார அன்னை ஆலய தேரோட்டம் நேற்று நடந்தது.
புனித உபகார அன்னை ஆலயம்
தஞ்சை மாவட்டம் கள்ளப்பெரம்பூரில் புனித உபகார அன்னை ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா நடப்பது வழக்கம். விழாவில் 3 தேர்கள் வடம் பிடித்து இழுக்கப்பட்டு கிராம தெருக்களில் வலம் வந்து மீண்டும் ஆலயத்தை அடையும். இந்த ஆண்டு திருவிழாவையொட்டி கடந்த 28-ந் தேதி மாலை கொடியேற்றம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது.
தேரோட்டம்
நேற்று இரவு தேரோட்டம் நடந்தது. விழாவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்றது. இதில் கள்ளப்பெரம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக நேற்று காலை அதிகாரிகள் கள்ளப்பெரம்பூருக்கு சென்று தேர்களை பார்வையிட்டனர். பின்னர் தேரில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். தேரில் தீயணைப்பு கருவி அமைக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
அதிகாரிகள் ஆய்வு
கடந்த 27-ந் தேதி தஞ்சை அருகே களிமேட்டில் நடந்த தேர்த் திருவிழாவில் ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இதனால் அதிகாரிகள் கள்ளப்பெரம்பூரில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது. தேரோட்டத்தின் போது கள்ளப்பெரம்பூர் இன்ஸ்பெக்டர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story