செல்வமாரியம்மன், பெருமாள் கோவில்களில் அமுது படையல் விழா
செல்வமாரியம்மன், பெருமாள் கோவில்களில் அமுது படையல் விழா நடந்தது.
உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் கைக்களநாட்டார் தெருவில் உள்ள செல்வமாரியம்மனுக்கு 8-ம் ஆண்டு அமுது படையல் விழா நேற்று நடைபெற்றது. விழாவை முன்னிட்டு செல்வமாரியம்மனுக்கு பெரிய குளத்தில் இருந்து கரகம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தனர். இதையடுத்து அம்மனுக்கு பால், தயிர், இளநீர், திரவியபொடி, பன்னீர், சந்தனம், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் அம்மனுக்கு வஸ்திரம் சாற்றப்பட்டு, மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அமுது படையல் நடந்தது. பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதேபோல் உடையார்பாளையம் அருகே கழுமங்கலம் கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு அமுது படையல் நடைபெற்றது. இதையொட்டி கோவிலில் உள்ள ராமர், லெட்சுமணன், சீதை மற்றும் ஆஞ்சநேயர் ஆகிய தெய்வங்களுக்கு 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் வஸ்திரம் சாற்றப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் அமுது படையல் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Related Tags :
Next Story