விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிற்சி
விவசாயிகளுக்கு தோட்டக்கலை பயிற்சி அளிக்கப்பட்டது.
தா.பழூர்:
அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சோழமாதேவி கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கான தோட்டக்கலை துறை சார்ந்த பயிற்சி 2 நாட்கள் நடைபெற்றது. கிரீடு வேளாண் அறிவியல் மைய தோட்டக்கலைத்துறை தொழில்நுட்ப வல்லுனர் ராஜாஜோஸ்லின் வரவேற்று பேசினார். வேளாண் அறிவியல் மைய தலைவரும், முதுநிலை விஞ்ஞானியுமான அழகு கண்ணன் தலைமை தாங்கினார். தாட்கோ மேலாளர் மதன் பயிற்சி முகாமை தொடங்கி வைத்து தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கான தாட்கோ சார்ந்த திட்டங்கள் குறித்து விரிவாக பேசினார். தோட்டக்கலை துறை இயக்குனர் ஆனந்தன், உதவி இயக்குனர் சரண்யா ஆகியோர் தோட்டங்களில் பழங்கள், காய்கறிகள் உற்பத்தி, இயற்கை வேளாண்மை, வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம், நிலத்தை சீரமைத்தல், தோட்டங்களில் பூச்சிகளை கட்டுப்படுத்துதல், ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்தாமல் லாபகரமாக தோட்டப் பயிர்களை செய்தல் உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகளை விவசாயிகளுக்கு அளித்தனர். அறிவியல் மைய கால்நடை மருத்துவர் கார்த்திக், கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு குறித்த கையேடு வெளியிட்டு பயிற்சி அளித்தார். பயிற்சியில் 90 விவசாயிகள் கலந்து கொண்டனர். முடிவில் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் அசோக்குமார் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story