சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சண்டி யாகம்


சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சண்டி யாகம்
x
தினத்தந்தி 1 May 2022 4:05 AM IST (Updated: 1 May 2022 4:05 AM IST)
t-max-icont-min-icon

சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சண்டி யாகம் நடந்தது.

தாமரைக்குளம்:
அரியலூர் மாவட்டம் பொய்யாதநல்லூர் கிராமத்தில் உள்ள சாமுண்டீஸ்வரி அம்மன் கோவிலில் சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு பிரத்யங்கரா தேவிக்கு பிரமாண்டமான மிளகாய் சண்டி யாகம் நடைபெற்றது. யாகத்தில் மூட்டை, மூட்டையாக மிளகாய் போடப்பட்டது. ஜாதிக்காய், கடுக்காய், கருமிளகு, ரோஜா இதழ், முக்கனிகளான மா, பலா, வாழை உள்ளிட்ட பழங்களை யாகத்தில் போட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். சித்திரை மாத அமாவாசையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் அம்மனை தரிசித்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Next Story