நிலப்பிரச்சினைகளுக்கான தீர்வு முகாம்


நிலப்பிரச்சினைகளுக்கான தீர்வு முகாம்
x
தினத்தந்தி 1 May 2022 4:10 AM IST (Updated: 1 May 2022 4:10 AM IST)
t-max-icont-min-icon

நிலப்பிரச்சினைகளுக்கான தீர்வு முகாம் நடந்தது.

குன்னம்:
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்பேரில் மாவட்ட போலீசார் மற்றும் குன்னம் தாலுகா வருவாய்த்துறையினர் இணைந்து பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண மனு விசாரணை முகாம், குன்னம் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. முகாமில் தாசில்தார் அனிதா, பெரம்பலூர் மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சனா, சப்-இன்ஸ்பெக்டர் முகமது அபுபக்கர் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். முகாமில் பொதுமக்களிடம் இருந்து 8 மனுக்கள் பெறப்பட்டு, அதில் 7 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

Next Story