நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பெரம்பலூர்:
பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் நேற்று நாம் தமிழர் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகுரு தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை உயர்வுக்கு மத்திய அரசை கண்டித்தும், பெட்ரோலிய பொருட்கள், கியாஸ் சிலிண்டர் விலை உயர்வை குறைக்க வேண்டும். அரிசி, பருப்பு, காய்கனி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாட்டுக்குள் பிற மாநிலத்தவர் ஆதிக்கம் செலுத்துவதை தடுக்கும் விதமாக, உள்நுழைவுச்சீட்டு முறையை அமல்படுத்த வேண்டும். தமிழகத்தில் வேலை வாய்ப்புகளை தமிழர்களுக்கே வழங்க வேண்டும். மதுக்கடைகளை மூட வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் நடைபெறும் ஊழல், முறைகேடுகளை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின்போது காலியான கியாஸ் சிலிண்டர் மீது மண்பானையை வைத்து மாலை அணிவித்து இறுதிச்சடங்கு செய்வது போன்று நூதனமாக வைத்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story