மரத்தில் மினி லாரி மோதிய விபத்தில் மேலும் ஒருவர் சாவு
மரத்தில் மினி லாரி மோதி விபத்தில் மேலும் ஒருவர் இறந்தார்.
பெரம்பலூர்:
சென்னையை சேர்ந்த தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் கலைஞர்கள், சென்னையில் இருந்து மினி லாரியில் இசைக் கருவிகளை ஏற்றிக்கொண்டு மதுரையில் கலை நிகழ்ச்சி நடத்துவதற்காக வந்தனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் தண்ணீர்பந்தல் அருகே கடந்த 5-ந் தேதி அதிகாலை வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த மினி லாரி சாலையோர மரத்தின் மீது மோதியது.
இதில் பயணம் செய்த விழுப்புரம் மாவட்டம் ஏ.பி. குப்பத்தைச் சேர்ந்த அசோக்கின் மகன் அன்பு(வயது 27) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த அரியலூர் மாவட்டம் தளவாய் சிலுப்பனூரை சேர்ந்த இளவரசன் மகன் அரவிந்த்(24), கோவில்பட்டி, லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த செல்லசாமி மகன் அருண்குமார் (28) ஆகியோர் திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
விபத்தில் படுகாயம் அடைந்த திருவண்ணாமலை மாவட்டம், செஞ்சி பகுதியை சேர்ந்த நாகராஜின் மகன் நவீன்(25), உயர் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 4-ஆக உயர்ந்துள்ளது. இந்த விபத்து குறித்து ஏற்கனவே பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story