சைக்கிள் பிரசார பயணக்குழு பெரம்பலூர் வருகை
சைக்கிள் பிரசார பயணக்குழு பெரம்பலூர் வந்தனர்.
பெரம்பலூர்:
இளைஞர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் சென்னை, கன்னியாகுமரி, கோவை, புதுச்சேரி ஆகிய நான்கு முனைகளில் இருந்து திருச்சியை நோக்கி சைக்கிள் பிரசார பயணம் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. அதன் ஒரு பகுதியாக சென்னையில் இருந்து சங்கத்தின் மாநில செயலாளர் பாலா தலைமையிலான சைக்கிள் பிரசார பயண குழுவினர் பெரம்பலூர் மாவட்டத்திற்கு நேற்று காலை வந்தனர். அவர்களை சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை சுங்கச்சாவடியில் பெரம்பலூர் மாவட்ட இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தலைவர் சரவணன் தலைமையில், அச்சங்கத்தினர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர், சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர், அதன் விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள் வரவேற்று பெரம்பலூருக்கு அழைத்து வந்தனர்.
பின்னர் சைக்கிள் பிரசார குழுவினர் நான்கு ரோடு, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் ஆகிய இடங்களில் கோரிக்கைகளை வலியுறுத்தி பிரசாரம் செய்தனர். அப்போது அவர்கள், பெரம்பலூரில் தொழிற்சாலைகள் தொடங்கி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை வழங்கிட வேண்டும். சிறு, குறு தொழில்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை உறுதித்திட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ.21 ஆயிரம் என சட்டம் இயற்றிட வேண்டும். தனியார் துறை வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவதுடன் பணி பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும், என்றனர். இதையடுத்து மாலையில் சைக்கிள் பிரசார பயண குழுவினர் திருச்சிக்கு புறப்பட்டு சென்றனர்.
Related Tags :
Next Story