ரூ.70 லட்சத்துக்கு பருத்தி ஏலம்


ரூ.70 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
x
தினத்தந்தி 1 May 2022 4:24 AM IST (Updated: 1 May 2022 4:24 AM IST)
t-max-icont-min-icon

ரூ.70 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

எடப்பாடி:
கொங்கணாபுரத்தில் இயங்கிவரும் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் நேற்று பருத்தி ஏலம் நடந்தது. மொத்தம் 2 ஆயிரம் மூட்டைகள் 500 லாட்டுகளாக ஏலம் விடப்பட்டது. இதில் பி.டி. ரக பருத்தி குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 600 முதல் ரூ.12 ஆயிரத்து 669 வரையும், டி.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ரூ.9 ஆயிரத்து 500 முதல் ரூ.12 ஆயிரத்து 169 வரை விற்பனையானது. மொத்தம் ரூ.70 லட்சத்துக்கு பருத்தி ஏலம் போனது.

Next Story