ரேஷன் கடை ஊழியரின் மனைவி தீக்குளித்து சாவு
செங்குன்றம் அருகே தீக்குளித்த ரேஷன் கடை ஊழியரின் மனைவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
செங்குன்றம்,
செங்குன்றத்தை அடுத்த வடகரை காந்தி தெருவைச் சேர்ந்தவர் மதன் (வயது 30). இவர் கொளத்தூரில் உள்ள ஒரு ரேஷன் கடையில் தற்காலிக ஊழியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி மோனிகா (27). இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
மதனுக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும், அடிக்கடி குடித்துவிட்டு வீட்டுக்கு வந்ததால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரிகிறது. நேற்று முன்தினம் வழக்கம் போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.
இதில் விரக்தி அடைந்த மோனிகா, வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதி்ல் பலத்த தீக்காயம் அடைந்த மோனிகா, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து செங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story