காஞ்சீபுரத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் புதிய ஷோரூம்: திறப்பு விழாவையொட்டி பல்வேறு சலுகைகள்


காஞ்சீபுரத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் புதிய ஷோரூம்: திறப்பு விழாவையொட்டி பல்வேறு சலுகைகள்
x
தினத்தந்தி 1 May 2022 1:48 PM IST (Updated: 1 May 2022 2:52 PM IST)
t-max-icont-min-icon

காஞ்சீபுரத்தில் ஜோஸ் ஆலுக்காஸ் புதிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது. திறப்பு விழாவையொட்டி பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

காஞ்சீபுரம்,

பிரபல ஜூவல்லரி நிறுவனமான ஜோஸ் ஆலுக்காஸ் புதிய ஷோரூம் காஞ்சீபுரம், மேற்கு ராஜவீதியில் திறக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான விழாவில் காஞ்சீபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் தலைமை தாங்கி ரிப்பன் வெட்டி ஷோரூமை திறந்து வைத்தார்.

இதில் மாநகராட்சி வார்டு உறுப்பினர் சூர்யா சோபன், நகர செயலாளர் கே.ஆறுமுகம், ஏ.எஸ்.பாபுஷா தலைவர் ஏ.பி.சுப்ரமணிஷ், பச்சையப்பாஸ் சில்க்ஸ் தலைவர் டி.சுந்தர் கணேஷ், வரமஹாலட்சுமி சில்க்ஸ் இயக்குனர் பி.கோபிநாத், பில்லாபாங் சர்வதேச உயர்நிலைப்பள்ளி தலைவர் சி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றினர்.

விழாவில், ஜோஸ் ஆலுக்காஸ் குழுமத்தின் நிர்வாக இயக்குனர்கள் வர்கீஸ் ஆலுக்கா, பால் ஜெ.ஆலுக்கா, ஜான் ஆலுக்கா, போலீஸ் டி.ஐ.ஜி. சத்யபிரியா, தொலைக்காட்சி பிரபலங்கள் டெல்னா, திவ்யா ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த புதிய ஷோரூமில் பி.ஐ.எஸ். ஹால்மார்க் 916 தங்க நகைகள் மற்றும் சர்வதேச லேப் சான்றிதழ் பெற்ற வைர நகைகளின் கலெக்‌ஷன்கள் மிக அதிக அளவில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருக்கின்றன. இவற்றுடன் கண்ணை கவரும் புதிய வடிவிலான பிளாட்டினம் நகைகளும் விற்பனைக்கு இருக்கின்றன. திறப்பு விழாவையொட்டி வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரூ.35 ஆயிரத்துக்கு தங்க நகை வாங்குபவர்களுக்கு தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும். வாடிக்கையாளர்கள் தங்கள் பழைய 22 காரட் தங்க நகைகளை விலையில் எந்த நஷ்டமும் இல்லாமல் புதிய பி.ஐ.எஸ். ஹால்மார்க் 916 தங்க நகைகளுக்கு அல்லது ஐ.ஜி.ஐ சான்றளித்த வைர நகைகளுக்கு மாற்றிக்கொள்ளலாம். இவை தவிர வைர நகைகளுக்கு 20 சதவீதமும், பிளாட்டினம் நகைகளுக்கு 7 சதவீதமும் தள்ளுபடியுடன் இலவச பரிசுகளும் வழங்கப்படும்.

மிகக்குறைந்த செய்கூலியுடன், நகைகளை திரும்ப பெற்றுக்கொள்ளும் வசதியையும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். திருமண நகைகளுக்கு சிறப்பு தள்ளுபடி வழங்கப்படுவதுடன், மாதாந்திர தங்க நகை சேமிப்பு திட்டத்தின் மூலமும் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான நகைகளை வாங்கி மகிழலாம்.

மேலும் அட்சய திருதியை முன்னிட்டு முன்பதிவு திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கிறது. வாடிக்கையாளர்கள் இந்த புதிய ஷோரூமுக்கு வருகை தந்து ஒரு மிக சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை பெறலாம் என ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Next Story