பந்தலூர் அருகே மகா முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா


பந்தலூர் அருகே மகா முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா
x
தினத்தந்தி 1 May 2022 6:55 PM IST (Updated: 1 May 2022 6:55 PM IST)
t-max-icont-min-icon

பந்தலூர் அருகே மகா முத்துமாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா நடந்தது.

பந்தலூர்

பந்தலூர் அருகே பொன்னானியில் பிரசித்தி பெற்ற மகா ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 29-ந்தேதி கணபதி பூஜையுடன் தொடங்கியது. இதையொட்டி கொடியேற்று விழா நடந்தது. முன்னதாக அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. 30-ந்தேதி அம்மனின் தேர் ஊர்வலம் புறப்பட்டு மாஸ்டர்காடு, சக்கரகுளம்,  அம்பலபாடி வரை சென்று பொன்னானி வழியாக கோவில் வந்தது. நீர்வெட்டு பூஜை மற்றும் மாவிளக்கு பூஜை நடந்தது. அம்மனின் சக்தி கரகம் வீடு வீடாக சென்று அபிஷேக ஆராதனைபெற்று. அப்போது பக்தர்கள் அலகு குத்தி வேண்டுதல்  
நிறைவேற்றினார்கள்.  விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில்நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து இருந்தனர். 

Next Story