திருமணமாகாத விரக்தியில் ஆட்டோ டிரைவர் தற்கொலை


திருமணமாகாத விரக்தியில்  ஆட்டோ டிரைவர் தற்கொலை
x
தினத்தந்தி 1 May 2022 8:13 PM IST (Updated: 1 May 2022 8:13 PM IST)
t-max-icont-min-icon

திருமணமாகாத விரக்தியில் ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.

தேனி:
தேனி அருகே உள்ள கோடாங்கிபட்டியை சேர்ந்த தெய்வேந்திரன் மனைவி ஜோதி (வயது 55). இவர் அதே ஊரில் டீக்கடை நடத்தி வருகிறார். இவருடைய மகன் பாண்டியன் (27) ஆட்டோ ஓட்டி வந்தார். இவர் தனக்கு திருமணம் செய்து வைக்குமாறு தனது தாயிடம் அடிக்கடி கூறி தகராறு செய்து வந்தார். ஆனால், அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. இதனால் ஜோதி தனது டீக்கடையை மூடிவிட்டு சொந்த ஊரான ராஜதானிக்கு செல்ல முடிவு செய்தார். 
இந்தநிலையில் திருமணம் ஆகாமல் விரக்தி அடைந்த பாண்டியன் தனது வீட்டில் நேற்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழனிசெட்டிபட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஜோதி கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story