தேனி மாவட்டத்தில் 130 ஊராட்சிகளில் மே தின கிராமசபை கூட்டம் அம்பாசமுத்திரத்தில் கலெக்டர் பங்கேற்பு
தேனி மாவட்டத்தில் 130 கிராம ஊராட்சிகளிலும் நேற்று மே தின கிராமசபை கூட்டம் நடந்தது.
தேனி:
கிராமசபை கூட்டம்
தமிழகம் முழுவதும் மே தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி, தமிழகம் முழுவதும் இன்று மே தின கிராமசபை கூட்டம் நடந்தது.
தேனி மாவட்டத்தில் உள்ள 130 ஊராட்சிகளிலும் மே தின கிராமசபை கூட்டம் இன்று நடந்தது. அந்தந்த ஊராட்சி மன்ற தலைவர்கள் தலைமையில் இந்த கிராமசபை கூட்டம் நடந்தது. கூட்டத்தில் ஊராட்சி வரவு, செலவு விவரங்கள் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. ஊராட்சி வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. திறந்தவெளி கழிப்பிடத்தை ஒழித்தல், குழந்தை தொழிலாளர் முறை ஒழித்தல், குழந்தை திருமணங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், தடுப்பூசி செலுத்தி கொள்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
கலெக்டர் பங்கேற்பு
தேனி அருகே அம்பாசமுத்திரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சி தலைவர் சுமித்ரா தலைமை தாங்கினார். இதில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசும்போது, "அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2-ன் கீழ் 2022-2023-ம் ஆண்டு அம்பாசமுத்திரம் ஊராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் பணிகளை தேர்வு செய்ய வேண்டி உள்ளது. புதிதாக தேர்வு செய்யப்பட்ட பணிகள், வேலை வழங்குவதற்கான தொழிலாளர் மதிப்பீடு இறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டப் பணிகளில் இயற்கை வள வேளாண்மை பணிகள், விவசாயம் தொடர்புடைய பணிகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள், குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் தனிநபர் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ஊட்டச்சத்து இயக்கத்தில் கலந்துகொண்டு பயனடைய வேண்டும். ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை முற்றிலும் தவிர்க்க வேண்டும்" என்றார்.
இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தண்டபாணி, தேனி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி மற்றும் அரசின் பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ.
உத்தமபாளையம் ஒன்றியம் நாகையகவுண்டன்பட்டியில் நடந்த கூட்டத்திற்கு கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். ஊராட்சி தலைவர் தீபா ராமராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் எம்.எல்.ஏ. பேசுகையில், தமிழக அரசு சார்பில் கிராம ஊராட்சிகளுக்கு எண்ணற்ற நலத்திட்டங்கள் செய்யப்பட்டு வருகிறது எனவே பொதுமக்கள் தங்கள் கோரிக்கை குறித்து மனு கொடுங்கள். அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள மக்களின் கோரிக்கையை ஏற்று சமுதாய கூடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். கூட்டத்தில் உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயகாந்தன், செண்பகவல்லி, மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராயப்பன்பட்டியில் தலைவர் பால்ராஜ் தலைமையிலும், ஆனைமலையன்பட்டியில் தலைவர் கண்மணி மும்மூர்த்தி தலைமையிலும், கோகிலாபுரத்தில் தலைவர் கருப்பையா தலைமையிலும், அம்மாபட்டியில் தலைவர் கவிதா நாகராஜ் தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
மகாராஜன் எம்.எல்.ஏ.
ஆண்டிப்பட்டி ஒன்றியம் மொட்டனூத்து கிராமத்தில் ஊராட்சி தலைவர் நிஷாந்தி கருப்பு தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன் கலந்து கொண்டு பொதுமக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார். இதில் துணைத்தலைவர் வேலுத்தாய், ஊராட்சி செயலர் விஜயன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
டி.சுப்புலாபுரத்தில் ஊராட்சி தலைவர் அழகுமணி தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன் பார்வையாளராக கலந்து கொண்டார். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) ரவிச்சந்திரன், தாசில்தார் திருமுருகன், ஊராட்சி துணைத்தலைவர் கண்ணதாசன், ஊராட்சி செயலர் பாலமுருகன் மற்றும் கார்த்திகேயன் உள்பட பலர் கலந்து கொண்டனர். திம்மரசநாயக்கனூர் ஊராட்சி சார்பில் மல்லையாபுரத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சி தலைவர் அட்சயா தலைமை தாங்கினார். ராஜகோபாலன்பட்டியில் தலைவர் வேல்மணி பாண்டியன் தலைமையிலும், சண்முகசுந்தரபுரத்தில் தலைவர் ரத்தினம் தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.
பெரியகுளம்
பெரியகுளம் ஒன்றியம் எண்டப்புளியில் கிராமசபை கூட்டம் நடந்தது. இதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சின்ன பாண்டியன் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக சப்-கலெக்டர் ரிஷப் பங்கேற்றார். மேற்பார்வையாளராக உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் நாகராணி மற்றும் கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி செயலாளர் பிச்சைமணி நன்றி கூறினார். கீழவடகரை ஊராட்சியில் தலைவர் செல்வராணி செல்வராஜ் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. துணைத்தலைவர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். உதவி இயக்குனர் (தணிக்கை) மகேந்திரன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்.
வடபுதுப்பட்டியில் தலைவர் (பொறுப்பு) பிரியா செந்தில் தலைமையிலும், லட்சுமிபுரத்தில் தலைவர் ஜெயமணி சந்திரன் தலைமையிலும், சரத்துப்பட்டியில் தலைவர் சாந்தி கண்ணையன் தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடந்தது.
கடமலை-மயிலை ஒன்றியம்
கடமலை-மயிலை ஒன்றியம். மயிலாடும்பாறையில் ஊராட்சி தலைவர் பார்வதி அன்பில்சுந்தரம் தலைமையிலும், கடமலைக்குண்டுவில் ஊராட்சி தலைவர் சந்திராதங்கம் தலைமையிலும், பொன்னன்படுகையில் ஊராட்சி தலைவர் பூங்காகாத்தமுத்து தலைமையிலும், நரியூத்தில் ஊராட்சி தலைவர் தங்கப்பாண்டி தலைமையிலும், பாலூத்தில் ஊராட்சி தலைவர் ஜெயப்பிரியா உதயகுமார் தலைமையிலும், துரைச்சாமிபுரத்தில் ஊராட்சி தலைவர் மாயகிருஷ்ணன் தலைமையிலும், எட்டப்பராஜபுரத்தில் ஊராட்சி தலைவர் ராசாத்தி பால்சாமி தலைமையிலும், மூலக்கடையில் ஊராட்சி தலைவர் சுப்பிரமணி தலைமையிலும், வருசநாட்டில் ஊராட்சி தலைவர் மணிமுத்து தலைமையிலும் கிராமசபை கூட்டம் நடந்தது. இதில் குடிநீர், பொதுசுகாதாரம் மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு உள்ளிட்டவை தொடர்பாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்த கிராமசபை கூட்டங்களில் கடமலை-மயிலை ஒன்றிய ஆணையர்கள் திருப்பதிவாசகன், திருப்பதிமுத்து ஆகியோர் கலந்து கொண்டனர்.
கம்பம்
கம்பம் ஒன்றியம் குள்ளப்பகவுண்டன்பட்டியில் தலைவர் பொன்னுத்தாய் குணசேகரன் தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. இதில் சப்-கலெக்டர் செல்வராஜ் பார்வையாளராக கலந்து கொண்டார். ஆங்கூர்பாளையத்தில் தலைவர் சாந்தி பரமன், கருநாக்கமுத்தன்பட்டியில் தலைவர் மொக்கப்பன், சுருளிப்பட்டியில் தலைவர் நாகமணிவெங்கடேசன், நாராயணத்தேவன்பட்டியில் தலைவர் பொன்னுத்தாய்செல்லையா ஆகியோர் தலைமையில் கிராம சபை கூட்டம் நடந்தது.
Related Tags :
Next Story