தொழிலாளியை கொன்றவர் கைது
தொழிலாளியை கொன்றவர் கைது
குண்டடம்,
குண்டடத்தை அடுத்துள்ள கத்தாங்கண்ணியைச் சேர்ந்தவர் சுப்பிரமணியம். விவசாயி. இவரது தோட்டத்தில் திண்டுக்கல் மாவட்டம் ஆலம்பட்டியைச் சேர்ந்த செல்லாண்டி (வயது 38), சிவகங்கை மாவட்டம் கலாப்பூரைச் சேர்ந்த அருண்பாண்டியன் (22) உள்ளிட்ட 15-க்கும் மேற்பட்டோர் தங்கியிருந்து வெங்காய அறுவடைப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்த நிலையில் செல்லாண்டியிடம் ரூ.200 அருண்பாண்டியன் கடன் வாங்கியிருந்ததாக தெரிகிறது. கடனை செல்லாண்டி திரும்ப கேட்டபோது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் கம்பியால் குத்தி செல்லாண்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக குண்டடம் போலீசார் கொலையாளி அருண்பாண்டியனை 24 மணிநேரத்தில் கைது செய்தனர்.
Related Tags :
Next Story