பள்ளியின் மேற்கூரைஉடைந்து காணப்படுகி றுது


பள்ளியின் மேற்கூரைஉடைந்து காணப்படுகி றுது
x
தினத்தந்தி 1 May 2022 9:52 PM IST (Updated: 1 May 2022 9:52 PM IST)
t-max-icont-min-icon

பள்ளியின் மேற்கூரைஉடைந்து காணப்படுகி றுது

பொங்கலூர்;
பொங்கலூர் அருகே சேமலை கவுண்டம்பாளையம் பள்ளியின் மேற்கூரைஉடைந்து காணப்படுகி றுது. இதனால் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.
அரசு பள்ளி 
மனதில் இருளை அகற்றி அகல் விளக்கை ஏற்றி வைக்கும் புனித இடம் பள்ளி. வறுமை அரக்கனை ஓடஓட விரட்டும் ஆயுதமும் கல்வியே. அந்த கல்வி ஏழை குழந்தைகளுக்கும் எட்டும் தூரத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக மாநில அரசு கல்விக்கு பல ஆயிரம் கோடிகளை செலவு செய்கிறது. ஆனாலும் பல்வேறு அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு போதிய வகுப்பறை இல்லாமலும், இருக்கும் கட்டிடம் பழுதடைந்தும், வர்ணமே பார்க்காத சுவர்களுமே காட்சி அளிக்கிறது. இன்றைய இந்தியாவில் அனைவராலும் தனியார் பள்ளிகளில் சேர்ந்து படிக்க பொருளாதாரம் இடம் கொடுப்பது இல்லை. 
பொங்கலூர் அருகே சேமலை கவுண்டம்பாளையத்தில் அரசு நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில்  150-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் பழமையான கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் பழுதடைந்து இருந்ததால் இதனை பராமரிப்பு செய்யும் பணி கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நடைபெற்றது. பணிகள் நிறைவுற்ற பின் தற்போது மேற்கூரையில் ஓடுகள் உடைந்து மழை நீர் ஒழுகும் நிலையில் இருப்பதாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் குற்றச்சாட்டு தெரிவிக்கின்றனர். 
ஆபத்து நிறைந்த கட்டிடம்
இந்த கட்டிடத்தின் உள்ளே 5, 6 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்கள் சுமார் 60 பேர் அமர்ந்து படித்து வருகிறார்கள். மழை மற்றும் பலத்த காற்று வீசும்போது ஓடுகள் உடைந்து மாணவ-மாணவிகள் மீது விழும் பெரும் ஆபத்து நிலவிவருகிறது. மேலும் பராமரிப்பு பணியின் போது சேகரமான கட்டிட கழிவுகளையும் பள்ளி வளாகத்திற்குள்ளேயே கொட்டி வைக்கப்பட்டுள்ளது. இதனுள் பாம்பு மற்றும் விஷ பூச்சிகள் ஏதாவது இருந்தால் மாணவ-மாணவிகளுக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலையும் உள்ளது. எனவே அந்த கட்டிட கழிவுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்றும், உடைந்த ஓடுகளை உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பராமரிப்பு பணி செய்து ஒரு மாத காலத்திற்குள்ளாகவே இதுபோன்ற ஒரு சூழ்நிலை நிலவுவது இந்த பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Next Story