வ.உ.சி. துறைமுகத்தில் கலாசாரம், பண்பாட்டை விளக்கும் கலைநிகழ்ச்சி


வ.உ.சி. துறைமுகத்தில் கலாசாரம், பண்பாட்டை விளக்கும் கலைநிகழ்ச்சி
x
தினத்தந்தி 1 May 2022 9:52 PM IST (Updated: 1 May 2022 9:52 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் கலாசாரம், பண்பாட்டை விளக்கும் கலைநிகழ்ச்சி நடந்தது.

தூத்துக்குடி:
இந்தியா சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளை கடந்ததை நினைவு கூறும் விதமாக, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக பள்ளி வளாகத்தில் மத்திய கலை மற்றும் கலாசார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை கலாஷேத்ரா கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் நாட்டின் வரலாற்று சிறப்பு மிக்க பாரம்பரியத்தையும், கலாசாரத்தையும் விளக்கும் வகையில் கலைநிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுதந்திர போராட்ட வீரர்கள் வ.உ.சிதம்பரனார், மகாத்மா காந்தி உள்ளிட்டோரின் சுதந்திர போராட்டங்களை பிரதிபலிக்கக்கூடிய வகையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
நிகழ்ச்சியில் வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி.ராமச்சந்திரன், டேவிதார், மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன், மாநகராட்சி ஆணையாளர் சாருஸ்ரீ, வ.உ.சி. துறைமுக ஆணைய துணைத்தலைவர் பிமல்குமார் ஜா, கலாசேத்ரா பவுண்டேசன் இயக்குனர் ரேவதி ராமச்சந்திரன், ஆலோசகர் பர்மா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Next Story