தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணி


தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணி
x
தினத்தந்தி 1 May 2022 9:58 PM IST (Updated: 1 May 2022 9:58 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணி நடந்தது.

தூத்துக்குடி:
தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை என்ற திட்டம் இந்த மாதம் முழுவதும் செயல்படுத்தப்படுகிறது. மருத்துவமனையில் ஏற்படக்கூடிய கிருமித்தொற்றை கட்டுப்படுத்துவது, நோயாளிகளுக்கு வசதி செய்து கொடுப்பது, மருத்துவமனை வளாகத்தை தூய்மையாக வைத்திருப்பது ஆகியவை இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்யும் பணி நடந்தது. இந்தப்பணியினை உறைவிட மருத்துவ அலுவலர் சைலஸ் ஜெபமணி தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மருத்துவமனை ஊழியர்கள் மூலம் வளாகத்தில் உள்ள புதர்கள் மற்றும் தேங்கி இருக்கும் இதர கழிவுகள் அகற்றப்பட்டன. மேலும் மருத்துவமனையில் உள்ள ஒவ்வொரு பகுதியிலும்  துப்பரவு செய்யும் பணிகளும் நடந்தது. தொடர்ந்து மருத்துவக்கல்லூரி மாணவர்கள் பிளாஸ்டிக் தடை மற்றும் மஞ்சப்பை இயக்கம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Next Story